Monday, October 10, 2011

கதாபிரசங்கமும் தசாவதாரமும்

இன்று வல்லிபுர ஆழ்வார் கோவில் தேர் திருவிழா. காலையில் உற்சாகமாக எழும்பி சிவனே என்று அங்க போய் அடியார் கூட்டத்தில் நின்று அழகாக தேர் படம் எடுக்கும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. 

கோவிலின் ஒலிபெருக்கியில் ஒரு பெரியவர் கதாபிரசங்கம் செய்து கொண்டிருந்தார், அவர் சைவசமயம் பற்றியும் வைணவம் பற்றியும் விளக்கம் கொடுத்தார். நான் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் , இந்த வித்தியாசம் தசாவதார படத்தை படத்தில் சிறப்பாக காட்டப்பட்டது  என்று குறிப்பிட்டார். இந்த படம் வந்த பொழுது இந்தியாவில் சைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக ஒரு ஞாபகம், ஆனால் சிவ பூமி என்று அழைக்கப்படும் யாழில் உள்ள ஒரு ஆழ்வார் ஆலயத்தில் இந்த படத்தை காட்டி கதாபிரசங்கம் செய்யும் போது கேட்கும் பக்குவம் எம் மக்களிடையே இருப்பதும் இது போன்று கதாபிரசன்கங்கள் காலத்துக்கு ஏற்றால் போல 'update' ஆவதும் சந்தோஷ பட வேண்டிய விஷயங்கள். 

தசாவதாரம் பட பாடலை இங்கே கேட்கலாம் ,

2 comments:

  1. Athu onnum pakkuvam kidayaathu. But sanaththukku antha alavu verupaadu theriyaathu. Vainavar romba per irunthu athukulla oru saathy, kaani and love pirachchanai vanthirunthaa therium appuram!! Inthukkal ellaam saivare enra ninaippum Jaffna la kooda.

    ReplyDelete