Friday, October 14, 2011

Thursday, October 13, 2011

Poetic

I am sure a poet can do wonders with this picture. For a moment I regret that I cannot write poetry. The look on the cats face...simply I was lucky to capture that.

IMG_6009

Wednesday, October 12, 2011

Vallipura Aalvaar Kovil Chariot

Last Monday I got a chance to be there when the Vallipura Aalvaar Chariot festival happned in Jaffna. If I am not mistaken its the most celebrated Vishnu temple in the Island. Crowds flocked in thousands defying the scorching heat to celebrate the day! These are some of the pictures I managed to capture.


IMG_6071
IMG_6134

IMG_6133

IMG_6093

Tuesday, October 11, 2011

யாழ் ரிப்போர்ட் ;)

இன்றுடன் எனது யாழ் ' trip ' முடிவடைகிறது. பெற்றோருடன் வந்து அவர்களுடனும் அக்கா, மாமா, மாமி மற்றும் அவர்களது செல்லங்களான பூனை, நாயுடன் நேரம் கழித்துவிட்டு மீண்டும் திரும்புவது திருப்தியாக இருக்கிறது. 


ஊரில் இந்த நாட்களில் முக்கியமான '  topic' , மர்ம மனிதன் -ஒவ்வருவரும் ஒவ்வரு விதத்தில் அவனை வருணிப்பார்கள் அனால் இதன் பின்புலம் பற்றி வர்ணிக்கும் போது மட்டும் நிச்சயமாக ........... தான் செய்றாங்கல் எண்டு அடித்து சொல்லுகிறார்கள். இங்கு உள்ள ஒரு  பெரிய ஒற்றுமை இந்த விஷயத்தில் மட்டும் தான், லைட் இடகட போவதுவும், மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதும் எல்லாம் அவங்கள் பிளான் பண்ணி செய்கிறார்களாம். இதை கேட்ட போது விமல் எழுதிய ப்ளாக் தான் ஞாபகம் வந்தது. 

இங்கு வந்து இருந்து "Tuesdays with Morrie" என்ற புத்தகம் வாசித்ததில் சிலகாலம் செய்ய வேண்டும் என்று நினைத்து செய்யாமல் தட்டி போட்ட ஒரு விஷயத்தை செய்யும் முயற்சியில் ஒரு இரு படிகள் வைக்க கிடைத்ததும் ஒரு சந்தோசம். இது பற்றி நேரம் கனிந்து வரும் போது இங்கு எழுதுவேன். 

அனால் ஒரு கவலை, நான் camera cable ஐ கொண்டு வர மறந்து விட்டேன் எடுத்த படங்களை பார்க்காமல் இருப்பது மனதுக்கு கஷ்டம்.  நாளை அவற்றை பஹிர முயல்வனே . 

Monday, October 10, 2011

கதாபிரசங்கமும் தசாவதாரமும்

இன்று வல்லிபுர ஆழ்வார் கோவில் தேர் திருவிழா. காலையில் உற்சாகமாக எழும்பி சிவனே என்று அங்க போய் அடியார் கூட்டத்தில் நின்று அழகாக தேர் படம் எடுக்கும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. 

கோவிலின் ஒலிபெருக்கியில் ஒரு பெரியவர் கதாபிரசங்கம் செய்து கொண்டிருந்தார், அவர் சைவசமயம் பற்றியும் வைணவம் பற்றியும் விளக்கம் கொடுத்தார். நான் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் , இந்த வித்தியாசம் தசாவதார படத்தை படத்தில் சிறப்பாக காட்டப்பட்டது  என்று குறிப்பிட்டார். இந்த படம் வந்த பொழுது இந்தியாவில் சைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக ஒரு ஞாபகம், ஆனால் சிவ பூமி என்று அழைக்கப்படும் யாழில் உள்ள ஒரு ஆழ்வார் ஆலயத்தில் இந்த படத்தை காட்டி கதாபிரசங்கம் செய்யும் போது கேட்கும் பக்குவம் எம் மக்களிடையே இருப்பதும் இது போன்று கதாபிரசன்கங்கள் காலத்துக்கு ஏற்றால் போல 'update' ஆவதும் சந்தோஷ பட வேண்டிய விஷயங்கள். 

தசாவதாரம் பட பாடலை இங்கே கேட்கலாம் ,

Sunday, October 9, 2011

ஊர் கோவில்

இன்று காலை முதல் வேலையாக அம்மா "வா எங்கட குல தெய்வ கோயிலுக்கு போவம்" என்று சொல்லி கூட்டிட்டு போனவ. இதற்கு முன்னும் ஒரு முறை இங்கு போன ஒரு ஞாபகம் இருந்தாலும் அன்று திருவிழா நாள் என்ற படியால் கோவிலில் நேரத்தை ஒழுங்காக கழிக்க முடியவில்லை. ஆனால் இன்று என்னவோ அய்யர், அப்பா, அம்மா மற்றும் அடியேன் மட்டும் தான் கோவிலில். சனம் இல்லாத கோவில் என்றதால் என்னக்கு ஒரே சந்தோசம் . சந்தோசமாக நேரத்தை கழித்தேன். ஆங்கிலத்தில் சொன்னால் "peaceful" அக இருந்தது.


கோவிலில் ஒரு மரம் உள்ளது, ஆங்கிலயேர் காலத்தில் அவர்கள் கற்பூரத்தை தடை செய்த போது தெய்வாதீனமாக இந்த மரத்தில் இருந்து கற்பூரம் விளைந்ததாம். ஓ அப்படியா என்று ஆறுதலாக கேட்டு விட்டு மரத்தை சுற்றி வந்து கும்பிடும் போது, மரம் விசித்திரமாக தான் இருந்தது , மரத்தில் அப்படி ஒரு பெரிய கோரை, கால், உரியம் எல்லாம் அறுந்த நிலையில் இன்னும் நிற்பது சிறப்பு தான்.


எனக்கு ஆங்கிலேருக்கு தண்ணி காட்ட, யாருக்காக தோன்றியதோ அவரை போற்றுவதா அல்லது அவருக்காக தோற்றுவித்தவரை போற்றுவதா என்று புரிய வில்லை. அனால் ஒன்று எம்மவர்கள் ஆங்கிலேருக்கு நல்லா கடுப்பு ஏத்தி இருக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்!

Saturday, October 8, 2011

தமிழன் சேர்த்து கெட்டான்

365 தொடங்கிய பின் முதல் முறையாக யாழ் மண்ணில் இருந்து பதிவு எழுதுகிறேன். யாழில் இருந்து சற்று வித்தியாசமாக தமிழில் எழுதுவோம் என்று  ஒரு அற்ப ஆசை. இதற்கு முதல் ஒரு முறை  இப்படி ஆசை பட்டு கடைசியில்  "ஆங்கிலத்தில் போல் தமிழிலும் ஆக்கத்தில் பிழைகள் பல" என்றும் "என்ன திடீர் என்று .....யாருக்காக இது ...!!அவங்க சொன்னாங்களோ...!!" என்றும் கமென்ட் வாங்கினது இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. அனா என்னவோ மொழி உணர்ச்சி கொஞ்சம் இன்று  கூடினதாலும் , ஜெயகுமரன், விமல், ஏன்  அந்த வாணி கூட தமிழ்ல எழுதி பின்னி பிடல் எடுக்கும் போது இன்னும் ஒரு முறை நானும் எழுதி பார்க்க வேணும் எண்டு ஆர்வம் வந்தது. ;)


விறாந்தையில் இருந்து எழுத தொடங்கியதுடன் மாமா சொன்ன ஒரு சொற்தொடர் தான்  ஞாபகம் வந்தது, "தமிழன் சேர்த்து கெட்டான்"! சற்று நேரம் யோசித்து பார்த்த போது இது எவ்வளவு  உண்மை என்று உணர்தேன். இவ்வளவு நடந்த பின்னும் தமிழன் ஏதோ வாழ்வு என்றும் நிரந்தரமானது என்று எண்ணிகொன்று, அற்பமாக வாழ்வதை முற்றாக மறந்து செற்பதிலே மட்டும் கரிசனையாக உள்ளான். 


எனக்கும் , எம்மவர்கள்ளுக்கு விளங்க 

"பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே"


என்ற வரிகளை ஒட்டி விட வேண்டும் என்று ஒரு பெரிய ஆசை.