இன்று காலை முதல் வேலையாக அம்மா "வா எங்கட குல தெய்வ கோயிலுக்கு போவம்" என்று சொல்லி கூட்டிட்டு போனவ. இதற்கு முன்னும் ஒரு முறை இங்கு போன ஒரு ஞாபகம் இருந்தாலும் அன்று திருவிழா நாள் என்ற படியால் கோவிலில் நேரத்தை ஒழுங்காக கழிக்க முடியவில்லை. ஆனால் இன்று என்னவோ அய்யர், அப்பா, அம்மா மற்றும் அடியேன் மட்டும் தான் கோவிலில். சனம் இல்லாத கோவில் என்றதால் என்னக்கு ஒரே சந்தோசம் . சந்தோசமாக நேரத்தை கழித்தேன். ஆங்கிலத்தில் சொன்னால் "peaceful" அக இருந்தது.
கோவிலில் ஒரு மரம் உள்ளது, ஆங்கிலயேர் காலத்தில் அவர்கள் கற்பூரத்தை தடை செய்த போது தெய்வாதீனமாக இந்த மரத்தில் இருந்து கற்பூரம் விளைந்ததாம். ஓ அப்படியா என்று ஆறுதலாக கேட்டு விட்டு மரத்தை சுற்றி வந்து கும்பிடும் போது, மரம் விசித்திரமாக தான் இருந்தது , மரத்தில் அப்படி ஒரு பெரிய கோரை, கால், உரியம் எல்லாம் அறுந்த நிலையில் இன்னும் நிற்பது சிறப்பு தான்.
எனக்கு ஆங்கிலேருக்கு தண்ணி காட்ட, யாருக்காக தோன்றியதோ அவரை போற்றுவதா அல்லது அவருக்காக தோற்றுவித்தவரை போற்றுவதா என்று புரிய வில்லை. அனால் ஒன்று எம்மவர்கள் ஆங்கிலேருக்கு நல்லா கடுப்பு ஏத்தி இருக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்!
No comments:
Post a Comment