Saturday, October 8, 2011

தமிழன் சேர்த்து கெட்டான்

365 தொடங்கிய பின் முதல் முறையாக யாழ் மண்ணில் இருந்து பதிவு எழுதுகிறேன். யாழில் இருந்து சற்று வித்தியாசமாக தமிழில் எழுதுவோம் என்று  ஒரு அற்ப ஆசை. இதற்கு முதல் ஒரு முறை  இப்படி ஆசை பட்டு கடைசியில்  "ஆங்கிலத்தில் போல் தமிழிலும் ஆக்கத்தில் பிழைகள் பல" என்றும் "என்ன திடீர் என்று .....யாருக்காக இது ...!!அவங்க சொன்னாங்களோ...!!" என்றும் கமென்ட் வாங்கினது இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. அனா என்னவோ மொழி உணர்ச்சி கொஞ்சம் இன்று  கூடினதாலும் , ஜெயகுமரன், விமல், ஏன்  அந்த வாணி கூட தமிழ்ல எழுதி பின்னி பிடல் எடுக்கும் போது இன்னும் ஒரு முறை நானும் எழுதி பார்க்க வேணும் எண்டு ஆர்வம் வந்தது. ;)


விறாந்தையில் இருந்து எழுத தொடங்கியதுடன் மாமா சொன்ன ஒரு சொற்தொடர் தான்  ஞாபகம் வந்தது, "தமிழன் சேர்த்து கெட்டான்"! சற்று நேரம் யோசித்து பார்த்த போது இது எவ்வளவு  உண்மை என்று உணர்தேன். இவ்வளவு நடந்த பின்னும் தமிழன் ஏதோ வாழ்வு என்றும் நிரந்தரமானது என்று எண்ணிகொன்று, அற்பமாக வாழ்வதை முற்றாக மறந்து செற்பதிலே மட்டும் கரிசனையாக உள்ளான். 


எனக்கும் , எம்மவர்கள்ளுக்கு விளங்க 

"பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே"


என்ற வரிகளை ஒட்டி விட வேண்டும் என்று ஒரு பெரிய ஆசை.

2 comments:

  1. நல்லாயிருக்குது, உங்களிடமிருந்து இன்னும் தமிழில் எதிர்பார்க்கிறேன் :)

    ReplyDelete