Sunday, December 25, 2011

என்னை வியக்க வைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி

எனக்கும் தொலைக்காட்சிக்கும் வெகு தூரம். ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை தொலைக்காட்சி பார்ப்பவன் நான். மிஞ்சி மிஞ்சி போனால் யாராவது சமூக வலை தளங்களில் பஹிரும் கிளிப்  பார்ப்பது உண்டு. நேற்று நான் வீடு வந்து இருந்த போது  டிவி ஐ போட்டு வைத்து விட்டு அனைவரும் தங்கள் தங்கள் வேலைகளை பார்க்க போய் விட்டார்கள் அது தன்ற பாட்டில் அழுது கொண்டு இருந்தது ஓப் பண்ண போன  நான் ஒரு விசித்திரமான நிகழ்ச்சியை பார்க்க கிடைத்தது. 

தமிழ் மொழியில் வார்த்தை விளையாட்டு, இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்களின் திறமை வியக்கவைத்தது , தமிழ் நாட்டில் இன்னும் இந்த அளவில் தமிழ் அறிவுடயவர்கள் இருக்கிறார்கள் என்று கண்டது, அதிலும் பார்க்க ஒரு பெரிய மகிழ்ச்சி. தமிழ் சினிமா வை பார்த்து இனி தமிழ் மெல்ல சாகும் என்று முடிவுடன் இருத்த என்னக்கு எது ஒரு பெரிய சந்தோசத்தை கொடுத்தது. 24th மார்கழி 2012 நடைபெற்ற ஒரு வார்த்தை ஒரு லட்சம் - முடிந்தால் இந்த நிகழ்ச்சியை முழுசாக பார்க்கவும். 


2 comments:

  1. தற்போது இது பாடசாலை மாணவரிடையே நடைபெறுகின்றது. அவர்களது புலமை உண்மையிலேயே சில சமயம் மெய் சிலிர்க்க வைக்கின்றது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஆரபி .. அங்கு பாடசாலை மாணவர்களுக்கு தமிழ் தெரியும் என்று கேட்கவே சந்தோசமா இருக்கு ... youtube ல தேடி பார்க்க வேணும்

      Delete